கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி அறிவிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறவுள்ளது. சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிப்பு தொழில்நுட்பம் கற்பிக்கப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகளுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இவை விரும்பத்தக்க வகையிலும் பல்வேறு சுவைகளிலும் மிக எளிதில் கிடைப்பதே அதற்கான முக்கியக் காரணமாகும்.

இந்தப் பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். பயிற்சியின்போது சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும்.

இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 + GST 18% செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி நடைபெறும் இடம் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003 ஆகும்.

பேருந்து நிறுத்தம் வாயில் எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர் - 641003 ஆகும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003. தொலைபேசி எண் 94885 18268 ஆகும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...