கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தின விழிப்புணர்வு பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.


Coimbatore: உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று உலக மின்சார வாகன தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மின்சார வாகனங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் Kranthi Kumar Pati, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் M Sivaguru Prabhakaran ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்ற நோக்கிலும், மின்சார வாகனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் SSEM கோவை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியானது ரேஸ்கோர்ஸ் வருமானவரித்துறை அலுவலகத்தில் துவங்கி, அதே இடத்தில் நிறைவடைந்தது. SSEM சார்பில் மூன்றாவது முறையாக இந்த மின்சார வாகன பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மஹிந்திரா - ஜெயம் ஆட்டோ வடிவமைத்த, கல்கி திரைப்பட புகழ் 'புஜ்ஜி' கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் மின்சார வாகனங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...