பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


Coimbatore: பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிப்பார்.

இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மின்நுகர்வோர் தெரிவிக்கும் குறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றிற்கு உரிய தீர்வு காணப்படும்.

எனவே, பொள்ளாச்சி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...