கவுண்டம்பாளையம் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: வரும் தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் - ஆ.ரவி

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள டி.வி.எஸ் நகர் செல்லும் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 



இந்தக் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் J.S. சரத்விக்னேஷ் தலைமை வகித்தார்.



கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ஆ.ரவி பேசும்போது, "நாடாளுமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும் 25 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றோம். அதேபோல வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இப்போது இருந்து தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்தக் கூட்டத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மேலும் அதிமுக நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் அனைவரது முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி. தலைமை செயற்குழு உறுப்பினர் TP சுப்பிரமணியன், மாநில மகளிரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜவஹர், அவைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர்கள் சங்கர், ஈஸ்வரன், கண்ணகி. பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், கல்யாணசுந்தரம், சுனில்குமார், பிரபாகரன், வட்ட செயலாளர்கள் குட்டி வேலுச்சாமி.ரமணன், தனராஜ், காளிதாஸ், குமரேசன், மாமன்றஉறுப்பினர்கள் தமிழ்செல்வன், சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் மற்றும் அணி நிர்வாகிகள் ஹரிஸ், டாக்டர் கனேஷ்குமார், செந்தில் மூர்த்தி, சரண்யா, சதீஸ்குமார், பரமசிவம் BLA2 வட்ட கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கூட்டத்தில் அ.தி.மு.க நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் தி.மு.கவில் அனைவர் முன்னிலையிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.



கூட்டத்தின் இறுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...