கோவை காமராஜபுரத்தில் சிறப்பு தூய்மைப் பணி: கோவை எம்பி, மாவட்ட ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு 69-ல் உள்ள காமராஜபுரத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் சிறப்பு தூய்மைப்பணி (Mass Cleaning) இன்று (11.09.2024) நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர்கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த சிறப்பு தூய்மைப் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.



இவர்கள் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியினை தடுத்தல், டெங்கு கொசு புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், மற்றும் களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், மத்திய மண்டலத்தலைவர் மீனாலோகு, மக்கள் பிரதிநிதிகள், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...