திமுக பவள விழா: கோவையில் இல்லம் தோறும் கொடியேற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவையில் இல்லம் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது இல்லத்தில் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கோவை: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவையில் இல்லம் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா பீளமேடு அண்ணாநகர் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இல்லத்தில் நடைபெற்றது.



நிகழ்ச்சியில் நா.கார்த்திக் திமுக கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக பவள விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக எல்லைக்கு உட்பட்ட அனைத்து இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றும் விழா இன்று துவங்கியுள்ளது," என்றார்.

மேலும் அவர், "திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது வீடு, அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்களை வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அதன்படி, மாநகர் மாவட்டம் முழுவதும் திமுக தொண்டர்கள் இன்று உற்சாகத்துடன் திமுகவின் இருவண்ண கொடி ஏற்றும் நிகழ்ச்சியை துவக்கியுள்ளனர்," என்று தெரிவித்தார்.

நா.கார்த்திக் மேலும் கூறுகையில், "அரசியல், பொருளாதாரம், சமூக நீதி ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு அரணாக நிற்கும் இந்த இயக்கத்தின் பவள விழா என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது. பெண்களுக்கு சொத்துரிமை மட்டுமின்றி, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் இந்த இயக்கம்தான். தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சி மூலம், மக்களுக்கு எண்ணற்ற சேவையாற்றி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக வீடுகள் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி உற்சாகமாக நடந்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...