உடுமலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் சார்பில் சங்கு ஊதும் போராட்டம்

உடுமலையில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதை மூடப்பட்டதை எதிர்த்து சிபிஐஎம் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உடுமலை பழனி சாலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிதியின் கீழ் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் உள்ள யசோதா ராமலிங்கம் லே-அவுட்டை இணைக்கும் பாதையை பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதால் இந்த பாதை மறைக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.



பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட இந்த பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும், அது நிறைவேற்றப்படவில்லை. மேலும், கழுத்தறுத்தான் ஓடையை மறைத்து வீட்டு மனையாக மாற்றுவதையும் போராட்டக்காரர்கள் கண்டித்தனர்.

மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...