கோவை வடகோவை திமுக அலுவலகத்தில் நாளை உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கோவை வடகோவை திமுக அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 12) காலை 9 மணிக்கு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை வடகோவை திமுக அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 12) காலை 9 மணிக்கு கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுகவின் பவள விழா ஆண்டையொட்டி, புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு கட்சி தலைமையகத்தால் வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள் பகுதி வாரியாக வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள பீளமேடு பகுதி கழகம்-1, பீளமேடு பகுதி கழகம்-2, பீளமேடு பகுதி கழகம்-3, சிங்காநல்லூர் பகுதி கழகம்-1, சிங்காநல்லூர் பகுதி கழகம்-2, சிங்காநல்லூர் பகுதி கழகம்-3 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இது தொடர்பாக பகுதி கழக செயலாளர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நா.கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...