கோவை துடியலூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பாராட்டு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுன்சிலர் கார்த்திக்கின் தேர்தல் பணியை பாராட்டினார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ஆ.ரவி உரையாற்றினார். அவர் பேசுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நாடாளுமன்ற தேர்தலுக்காக உழைத்து வெற்றி பெற்றதைபோல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட வேண்டும்" என்றார்.



மேலும் அவர், "தலைவருக்கு நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தரவேண்டும்" என்று வலியுறுத்தினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுத் தந்த கார்த்திக்கை பாராட்டினார்.

இக்கூட்டத்தில் துணைச்செயலாளர் அசோக்பாபு ஆறுகுட்டி, முன்னாள் எம்.பி நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்ரன், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், பேரூர் கழக செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரங்கநாயகி, தலைமை கழக பேச்சாளர் சஹா விக்னேஷ், ஒன்றிய அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்ராஜா, சண்முகசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் அசோக்குமார், குருடம்பாளையம் சரவணன், ஓட்டுநர் அணி தலைவர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐ.டி விங்க் ஹரி, நாயக்கன்பாளையம் சந்துரு ஜெகவி, கோவனூர் ரவி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் உட்பட பல கட்சி நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...