பொள்ளாச்சி அருகே மாந்தோப்பில் 4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே செமனாம்பதி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் 4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள கலால் துறையினர் தமிழக போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி எரிசாராயத்தை கண்டுபிடித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள செமனாம்பதி கிராமத்தில் மாந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டோனிக்கு சொந்தமான மாந்தோப்பு, தமிழக-கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி கிராமத்தில் உள்ளது. இந்த தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கேரள மாநில கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கேரள மற்றும் தமிழக போலீசாரின் உதவியுடன் கலால் துறை துணை கமிஷனர் ராகேஷ் தலைமையிலான குழு தோட்டத்தில் சோதனை நடத்தியது.

சோதனையின் போது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 150 கேன்களில் மொத்தம் 4500 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தோட்ட உரிமையாளர் மருத்துவர் டோனியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை கேரள போலீசார் தமிழக எல்லையில் உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சபீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....