செத்தால் தான் குண்டு குழியை மூடுவீர்களா? - மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை திட்டம், சாலைகள் சீரமைப்பு, குப்பை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்துதல், மாவட்டம் முழுவதும் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சீரமைத்தல், குப்பை வரியை ரத்து செய்தல், வீடுகளில் தினசரி குப்பை சேகரிப்பை உறுதி செய்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியினர் பேசுகையில், "கடந்த ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை எஸ்பி வேலுமணி சூறையாடினார். ஓம் காளி! ஜெய் காளி! மாநகராட்சி கஜானா காலி! என்றாகிவிட்டது. இந்த முறை மாநகராட்சி கஜானாவை யார் காலி செய்து வருகிறார் என்று தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அதை அனுமதிக்காது" என்று குற்றம்சாட்டினர்.



"சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் மூவர் விழுந்ததும் உடனடியாக அந்த குழி மூடப்பட்டது. செத்தால் தான் குண்டு குழியை மூடுவீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.



"விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...