பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடற்ற தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி நகராட்சியில் 1,243 பதிவு பெற்ற தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இவற்றுடன் பதிவு பெறாத தள்ளுவண்டிகளிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் கணேசன் செப்டம்பர் 11 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், தினமும் வண்டியை எடுத்துச் சென்று மீண்டும் வியாபாரம் செய்யும் வகையிலேயே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வியாபாரம் செய்யும் இடத்தில் பந்தல் போடுதல், தடுப்புகள் அமைத்தல், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கைகள் போடுதல் போன்ற நிரந்தரமாக இடத்தை பிடித்து வியாபாரம் செய்யும் வகையில் செயல்படக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து செயல்படுவது கண்டறியப்பட்டால், அது ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றும் நகராட்சி ஆணையர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...