திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை கண்காட்சி தொடக்கம்

திருப்பூரில் சர்வதேச அளவிலான யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா, டைகெம் பிராசஸ் கண்காட்சிகள் தொடங்கின. 193 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா மற்றும் டைகெம் பிராசஸ் ஆகிய மூன்று கண்காட்சிகள் இன்று துவங்கியது. இந்த கண்காட்சிகள் திருப்பூர் பழங்கரையில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை இந்தியா நிட்பேர் அசோசியேசன் தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். இந்த நூலிழை கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.

பெல்ஜியம், கனடா, எகிப்து, சீனா, ஹாங்காங், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த நூலிழை தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் என 193 நூலிழை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த கண்காட்சியில் புதுமையான நூல், துணி ரகங்கள், டைஸ்கள், ஆஸிட், ஆடை அலங்கார பொருட்கள், இயற்கை ரகங்களான பருத்தி, பட்டு, கம்பளி ரகங்களும் செயற்கை நூலிழைகள், பிளண்டடு பாலியஸ்டர், ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும், பட்டன், ஜிப், லேஸ் உட்பட அனைத்து ஆடை தயாரிப்பு உபரி பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. 32-வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி, பின்னலாடை தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...