திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது - இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத்

திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறினார். பொதுமக்கள் இன்னல்கள், வியாபாரிகள் மிரட்டல், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.



திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது. இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக வியாபாரிகள் மிரட்டப்படுகிறார்கள்."

"இது தவிர பல்வேறு பகுதிகளில் அடிதடி சம்பவங்கள் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறுகிறது. இந்து முன்னணி கட்சியில் உள்ள இளைஞர்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள்."

மேலும் அவர், "நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது" என்றும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...