கோவை தெக்கலூரில் தனியார் ரிசார்ட் ஆக்கிரமிப்பு: கம்பிக்கு அடியில் புகுந்து செல்லும் மக்கள்

கோவை ஆனைகட்டி தெக்கலூரில் தனியார் ரிசார்ட் நிறுவனம் பொதுப்பாதையை ஆக்கிரமித்ததால், மக்கள் கம்பிக்கு அடியில் புகுந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் முறையீடு செய்துள்ளனர்.


கோவை: கோவை ஆனைகட்டி தெக்கலூரில் தனியார் ரிசார்ட் நிறுவனம் பொதுப்பாதையை ஆக்கிரமித்ததால், அப்பகுதி மக்கள் கம்பிக்கு அடியில் புகுந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக, தெக்கலூர் மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை நேற்று (செப்டம்பர் 11) அளித்துள்ளனர். அந்த மனுவில், புல எண் 1037, 1038/6, 1039/2,3,6,8, 1021/6, 1022, 1023, 893 ஆகியவற்றில் உள்ள நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தை (சுமார் 20 ஏக்கர்) ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிகள் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.ரிசார்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக இராட்சத மண் தோண்டும் இயந்திரங்கள் மூலம் இரவு பகலாக மண் மற்றும் பாறைகளை கடத்தி வருவதாகவும், இதனால் நீர்வழி பாதைகள் சிதைக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மலைப்பகுதி சுமார் 30 அடி ஆழத்திற்கு மேல் செங்குத்தாக வெட்டப்படுவதால், மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பால் பொதுமக்களும் கால்நடைகளும் அந்தப் பகுதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் ரிசார்ட் நிறுவனம் ஆக்கிரமித்த பாதையில் கம்பிக்கு அடியில் புகுந்து செல்லும் ஆதிவாசி மக்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...