கோவை அன்னபூர்ணா சீனிவாசன் ஜி.எஸ்.டி. மன்னிப்பு விவகாரம்: தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது - கனிமொழி எம்.பி கண்டனம்

ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில், நடைமுறை சிக்கல்கள் குறித்து பேசிய அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சரை சந்தித்து அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கோரிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், திருக்குறளை மேற்கோள் காட்டி, தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது என திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை கொடிசியாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பான சிக்கல்களை எடுத்துரைத்தார்.

இனிப்புக்கு 5% ஜி.எஸ்.டி. மற்றும் காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும், Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லாமலும் அதற்குள் வைக்கப்படும் க்ரீமுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் சீனிவாசன் சுட்டிக்காட்டினார். இந்த முரண்பாடுகள் காரணமாக உணவகம் நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தொழில்துறையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருக்குறளை மேற்கோள் கட்டிதிமுக மகளிர் அணி தலைவர் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி அவரது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில், ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து’

- குறள் 978, அதிகாரம் 98. 

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்றுஎச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...