கோவை ஏஜேகே கல்லூரியில் விமரிசையான ஓணம் கொண்டாட்டம்: ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி

கோவை ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. மாணவர்கள் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டனர். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.

மாணவிகள் அலுவலக கட்டிடத்திற்குள் பல்வேறு மலர்களால் கண்கவர் அத்தப்பூ கோலமிட்டனர். கல்லூரி வளாகத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களில் பாடல்கள் ஒலிக்க, சண்ட மேளம் உள்ளிட்ட பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்கின. மாணவர்கள் ஆடி பாடி குதித்து உற்சாக நடனம் ஆடினர்.



அத்தப்பூ கோலத்தைச் சுற்றி பாரம்பரிய உடையில் மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய நடனமான மோகினி ஆட்டம் ஆடி காட்டினர். தொடர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் களரி தற்காப்பு பயிற்சியை செய்து காட்டினர். இந்த பாரம்பரிய நடனமும் தற்காப்பு கலையும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.



விழாவின் போது அனைவருக்கும் ஓணம் சத்யா விருந்தளிக்கப்பட்டது. கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, வானில் வட்டமிட்டு கல்லூரியின் மைதானத்தில் வந்து தரையிறங்கிய ஹெலிகாப்டரை அனைவரும் கண்டு வியந்தனர்.



ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மகாபலிக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த விமரிசையான ஓணம் கொண்டாட்டம் மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...