கோவையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி கண்டனம்

கோவையில் GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.


Coimbatore: கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், GST விகிதங்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

இனிப்புக்கு 5% GST இருப்பதாகவும், காரத்துக்கு 12% இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பன்னுக்கு GST இல்லாமல் இருக்கும் அதே வேளையில், அதற்குள் வைக்கும் கிரீமுக்கு 18% GST விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்த முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்றும், கடை நடத்த முடியவில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படும் மற்றொரு வீடியோவும் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், "உணவக உரிமையாளரின் கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் நடத்தப்படுகிறது. தன் கோடீஸ்வர நண்பர்கள் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளை பெற முற்பட்டால், பிரதமர் மோடி சிவப்பு கம்பளம் விரிக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "பணமதிப்பிழப்பு, அணுக முடியாத வங்கிகள், வரி பறிப்பு, பேரழிவு தரும் GST போன்றவற்றை சிறு வணிகர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக சிறு வணிகர்களுக்கு கிடைப்பது மேலும் அவமானம் மட்டுமே" என்றும் ராகுல் காந்தி தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருவதாகவும், ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடிவாதம் புண்படுத்தப்படும் போது அவமானத்தை மட்டுமே தருவார்கள் என்பது நன்கு தெரிவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...