கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

கோவை தொண்டாமுத்தூர் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்தார். உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டுயானைகள் இப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் குடியிருப்புகளை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுக்கல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் இன்று (செப்.13) அதிகாலை காலைக்கடன் கழிக்க சென்ற போது காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையும் வனத்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக கூறி உயிரிழந்த தேவராஜின் உறவினர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் இதை அறிந்த கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று நேரில் சென்று யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...