கோவை மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி குற்றச்சாட்டு: திமுக-அதிமுக இடையே வாக்குவாதம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் 'ஸ்டிக்கர் ஆட்சி' குற்றச்சாட்டு எழுப்பினார். இதனால் திமுக-அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையர் க.சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மண்டல குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்தின் போது, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சியில் "ஸ்டிக்கர் ஆட்சி" நடப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அமைதி திரும்பியதும், மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...