உடுமலைப் பகுதியில் கார் விபத்து: மூவர் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே அதிவேக கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலப்பம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (52) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகோபால் (50) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் உடுமலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, பழனி நோக்கி வந்த கேரள மாநில கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்களது வாகனத்தின் மீது மோதியது.



நிலைதடுமாறிய கார், அருகில் பஸ்சுக்காக காத்திருந்த உடுமலை வி.ஜி.ராவ் நகரைச் சேர்ந்த சதாசிவம் (75) மற்றும் கோவை மதுக்கரையைச் சேர்ந்த ரங்கசாமி (68) ஆகியோர் மீதும் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



காயமடைந்த மூவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் மற்றும் ரங்கசாமி ஆகியோரும் உயிரிழந்தனர். சதாசிவம் தீவிர சிகிச்சையில் உள்ளார். காரில் பயணித்த குழந்தை உட்பட மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.



இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த உடுமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



விபத்து குறித்த தகவலறிந்த பாலப்பம்பட்டி பொதுமக்கள் உடுமலை-பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் வேகத்தடை குறியீடு இல்லாததே விபத்துக்கு காரணம் எனக் குற்றம்சாட்டினர்.



காவல்துறை ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், பாலமுருகன் மற்றும் வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மறியல் காரணமாக உடுமலை-பழனி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...