தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் ஐந்தாண்டு கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் ஐந்தாண்டு கூட்டம் நடைபெற்றது. பயிர் சிலந்திகள் ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் விவசாயிகளுக்கான தகவல் பரிமாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய பூச்சியியல் துறையில், அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் கூடும் ஐந்தாண்டிற்கு ஒரு முறையான கூட்டம் (2012-2023) 11.09.2024 அன்று நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மா.சாந்தி தொடக்க உரையாற்றினார். அவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் சிலந்திகள் ஆராய்ச்சியின் துவக்கம், நோக்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் புதிய வகை பயிர் சிலந்திகள் அதன் தாக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.



கூட்டத்தின் தலைவரான தோட்டக்கலை துறை முன்னாள் இணை இயக்குநர் முனைவர் நா.க.கிருஷ்ணகுமார், பயிர்களை தாக்கும் சிலந்தி வகைகள், ஒருங்கிணைந்த பயிர் சிலந்திகள் மேலாண்மை, பயிர் சிலந்தி எதிர்ப்பு திறன் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, அயல் நாட்டு பயிர் சிலந்தி வகைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார். மேலும், பயிர் சிலந்திகள் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், பயிர் சிலந்திகளால் ஏற்படும் மகசூல் இழப்பை வருமான இழப்பாக கருத வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஐந்தாண்டு கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில் NCIPM இயக்குநர் முனைவர் சுபாஷ் சந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் கு.ராமராஜு, UAS பெங்களூரு முன்னாள் PGS தலைவர் முனைவர் ந.ஸ்ரீனிவாசா, CSKHPKV பலம்பூர் முன்னாள் பேராசிரியர் மற்றும் பூச்சியியல் துறை தலைவர் முனைவர் ரவீந்தர் சிங்க் சந்தல், மண் கணுக்காலி பூச்சிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அர்ஜுன் சிங்க் பாலோடா மற்றும் UAS பெங்களூரு பயிர் சிலந்திகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.சின்னமாதே கௌடா ஆகியோர் அடங்குவர்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ம.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.



இந்த நிகழ்வில் பூச்சியியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், மண் கணுக்காலி பூச்சிகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் முனைவர் எ. சுமதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...