கோவை மாமன்ற கூட்டத்தில் சிறந்த மாநகராட்சி விருதை காட்சிப்படுத்திய மேயர் ரங்கநாயகி

கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சிறந்த மாநகராட்சி விருது மற்றும் ரூ.50 லட்சம் காசோலையை மேயர் ரங்கநாயகி மாமன்ற கூட்டத்தில் காட்சிப்படுத்தினார். இந்த விருது சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறந்த மாநகராட்சிக்கான விருதினை காட்சிப்படுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு முதல் பரிசாக இந்த விருதினையும், ரூ.50.00 இலட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.

மாமன்ற கூட்டத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS ஆகியோர் இந்த விருதினையும் காசோலையினையும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களிடம் காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் உடனிருந்தார்.

இந்த விருது, கோயம்புத்தூர் மாநகராட்சியின் சிறந்த செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக கருதப்படுகிறது. மேலும், இது மாநகராட்சியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...