உடுமலைப்பேட்டை திருப்பதி கோவிலில் நான்கு நாள் பவித்ரோத்ஸவ விழா தொடக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாள் பவித்ரோத்ஸவ விழா தொடங்கியது. விழாவில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாட்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா நேற்று தொடங்கியது.



விழாவின் முதல் நாள் நிகழ்வுகளில் புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், திருமஞ்சனம், அதிவாச ஹோமம், வேத திவ்ய பிரபந்த தொடக்கம், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாற்று முறை கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், ரேணுகா தேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.



இந்த விழாவில் உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடுமலைப்பேட்டை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

இந்த பவித்ரோத்ஸவ விழா வரும் 16 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...