உடுமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

உடுமலையில் ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



இந்த விலை உயர்வின் விவரங்களை பார்க்கும்போது, மல்லிகை ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆகவும், முல்லை ரூ.200-லிருந்து ரூ.1,000 ஆகவும், சாதிப்பூ ரூ.300-லிருந்து ரூ.600 ஆகவும், சம்பங்கி ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், கோழிக்கொண்டை ரூ.60-லிருந்து ரூ.100 ஆகவும், செவ்வந்தி ரூ.150-லிருந்து ரூ.200 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ.200-லிருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.



ரோஸ் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ரோஸ் கட்டு ரூ.160-லிருந்து ரூ.300 ஆகவும், பன்னீர் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், செண்டு மல்லி ரூ.40-லிருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையுடன் சேர்த்து தமிழர்களின் விசேஷ நிகழ்வுகளான காதணி, சீமந்தம், பூப்பு நன்னீராட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளும் நாளை அதிகளவில் நடைபெறுகின்றன. இந்த பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் ஒன்றிணைந்து வந்ததால் பூக்களுக்கான தேவை அதிகரித்து, அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



விலை அதிகரித்தாலும் கூட, மணக்கும் மல்லிகையை மனம் நோகாமல் வியாபாரிகள் சொன்ன விலைக்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...