கோவை மாநகராட்சி ஆணையாளர் பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் விநியோக வால்வு தொட்டி மூடியை சரிசெய்ய உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 14) வடக்கு மண்டலம் வார்டு எண் 26-க்குட்பட்ட பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.



பாலகுரு கார்டன் முதல் எல்லைத்தோட்டம் வரை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ள இடத்தை ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.



மேலும், பீளமேடு, விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள குடிநீர் விநியோகத்திற்கான வால்வு தொட்டியின் மூடியினை சாலையின் சமநிலைக்கு ஏற்றவாறு அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர் திருமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...