அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: கோவை R.S புரம் காந்திபார்க் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னபூர்ணா சீனிவாசனை மத்திய நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



செல்வப்பெருந்தகை தனது உரையில், "கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை ஒடுக்கி அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட பிறகும் தமிழகத்திற்கு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை. உண்டியலில் பணம் போட்டால் அரசுக்குச் செல்லும் ஆனால் ஐயர் தட்டில் பணம் போட வேண்டும் என்று பக்தர்களை கோவிலில் வலியுறுத்தியுள்ளார்" என்று நிர்மலா சீதாராமனின் செயல்களை விமர்சித்தார்.

"மெட்ரோ இரயிலின் 2-ம் கட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்தும், தற்போது தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறார். ஆட்சியை தக்க வைப்பதற்காக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு லட்சக்கணக்கான கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும்" என்றும் செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

"அன்னபூர்ணா பிரச்சனை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.



கூட்டம் முடிவில் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை க்ரீம் பன் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...