கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1844 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.40 கோடி இழப்பீடு வழங்கல்

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 1844 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.40 கோடியே 17 லட்சத்து 8 ஆயிரத்து 503 இழப்பீடு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்றார்.



கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாட்டில், தேசிய மக்கள் நீதிமன்றம் 14.09.2024 அன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மாண்புமிகு G.விஜயா அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான நீதியரசர் D.கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்றப்பதிவாளர் (பொது) M.ஜோதிராமன், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் A.நசீர் அஹமத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 1844 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வுத் தொகை ரூ.40 கோடியே 17 லட்சத்து 8 ஆயிரத்து 503 ஆகும். 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த 89 வழக்குகளும் இதில் தீர்க்கப்பட்டன. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள் மற்றும் குடும்பப் பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, நீதியரசர் D.கிருஷ்ணகுமார் அவர்கள், மோட்டார் வாகன விபத்தில் தனது மனைவியை இழந்த மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகையை காசோலையாக வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர் மற்றும் மதுக்கரை ஆகிய இடங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. மொத்தம் 27 அமர்வுகள் மூலம் மாவட்டம் முழுவதும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் வெற்றிக்கு உதவிய வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறையினர், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நன்றி தெரிவித்துக் கொண்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...