அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் காணொளியை நான் வெளியிடவில்லை - நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி பேட்டி

கோயம்புத்தூரில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சதீஷ், தான் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தன்னிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.



Coimbatore: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக இருந்த சதீஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பாஜகவினர் சதீஷ் மீது கட்சி தலைமையிடத்தில் புகார் அளித்தனர்.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரின் அனுமதி பெற்று, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் மீது பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், தான் சாதாரண கிளை பொறுப்பில் இருந்து கட்சியில் வளர்ந்து வந்ததாகவும், வீடியோவை மாவட்ட தலைவர் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும், இது குறித்து தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று சதீஷ் தெரிவித்தார்.

அதேபோல, தன்னுடைய பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியான நிலையில், தன்னை எப்படி நீக்கம் செய்தார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பியதும் இது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...