கோவையில் சாலை கடக்க தவித்த மாணவிகளுக்கு உதவிய பெண் காவலர்: வைரலாகும் வீடியோ

கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க தவித்தபோது, பெண் காவலர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவருக்கு பெண் காவலர் ஒருவர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2327 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றன. இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு கடைசி நேரத்தில் தேர்வெழுத வந்த மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க முடியாமல் தவித்தனர்.



இதனைக் கவனித்த அங்கிருந்த பெண் காவலர், உடனடியாக ஓடிச்சென்று இரண்டு மாணவிகளையும் சாலையைக் கடந்து அழைத்துச் சென்று தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பெண் காவலரின் இந்த உதவி செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நேரத்தை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கு உதவி செய்த பெண் காவலரின் செயல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...