அண்ணா பிறந்தநாளில் எஸ்.பி. வேலுமணி சபதம்: எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்

கோவையில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்ராக்குவோம் என சபதமேற்றார்.


Coimbatore: பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக நகர் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் தேமுதிகவைச் சேர்ந்த உதய பிரபாகரனும் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, "பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் கோவை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. கழகத்தின் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கழகக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது," என்றார்.



மேலும் அவர், "அண்ணா பிறந்த நாளில் கண்டிப்பாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியார் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சபதம் ஏற்கிறோம். தற்போதைய திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. மக்கள் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்," என்று கூறினார்.

கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்களையும் தெரிவித்த வேலுமணி, "கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்தில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அண்ணா திமுக காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து வருகின்றனர். அத்தனை மக்களுக்கும் அண்ணா திமுக சார்பாகவும், எடப்பாடியார் சார்பாகவும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...