தாராபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மரியாதை

தாராபுரத்தில் திமுக நகரக் கழகம் ஏற்பாடு செய்த பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மௌன ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்வுகள் திமுக நகரக் கழக செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றன. முதலில், பூளவாடி பிரிவு பகுதியில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மௌன ஊர்வலம் துவங்கி, சின்னக்கடை வீதி, டி.எஸ். கார்னர், ஜவுளிக்கடை வீதி, பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலையை அடைந்தது.



அண்ணா சிலைக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அமைச்சர்கள் திமுக கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும் திமுக ஒன்றியச் செயலாளருமான எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், நகர மன்றத் தலைவர் பாப்பு கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், திமுக நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தாராபுரம் ஒன்றிய, நகர, பேரூர் இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...