ஓணம் பண்டிகை: பாரம்பரிய உடையில் வரும் ஜோடிகளுக்கு தங்க நாணயம் பரிசு - கோவை ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு

கோவை ரயில் நிலையத்தில் போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் நடத்தும் ஓணம் சத்யா நிகழ்ச்சியில், பாரம்பரிய உடையில் வரும் ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. 200 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்வில் சிறப்பு ஓணம் உணவும் பரிமாறப்படுகிறது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் பாபி குரூப் நிறுவனத்தின் சார்பில் இயங்கும் போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி உணவகம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் இந்த உணவகம், ஓணம் திருநாளை முன்னிட்டு 'ஓணம் சத்யா' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே 200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு ஓணம் உணவுகள் வழங்கப்படுகின்றன.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 200 பேரில், ஓணம் பண்டிகையை சிறப்பாக விளக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிந்து வரும் ஜோடிகள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவர். இதில் மூன்று ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் அல்லது தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் பிரியாணி போட்டியை நடத்தி, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பரிசுத் தொகையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...