வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா: 108 சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் 33வது ஆண்டு கொண்டாட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில், 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் சார்பில் 33வது ஆண்டாக இந்த விழா கொண்டாடப்பட்டது.

வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை சுப்பிரமணி திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.



பின்னர், இந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



ஊர்வலம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு துவங்கி, காந்தி சிலை வழியாக வாழைத்தோட்டம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது.



பின்னர் மீண்டும் சுப்பிரமணியம் கோவில் வளாகத்தின் வழியாக நடுமலை ஆற்றை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ் (மாநில அமைப்பாளர்), C M அண்ணா துறை மாநில செயலாளர், T. பாலச்சந்திரன் (கோவை கோட்ட செயலாளர்) மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...