உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா: பரதநாட்டியத்தில் மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாள் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்வில் மாணவிகள் பரதநாட்டியம் ஆடி பக்தர்களை கவர்ந்தனர். சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாட்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை திருமஞ்சனம், ஹோமம், பவித்ரம் சாற்றுதல் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெற்றது.



மூன்றாம் நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமமும் சாற்று முறை கோஷ்டியும் நடைபெற்றது.



பின்னர் முக்கிய நிகழ்வான மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மற்றும் அம்மன் பாடல்களுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



பரதநாட்டிய நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...