கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றன

கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் கவுண்டம்பாளையம் அருகே உள்ள எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் இரவு-பகல் ஆட்டமாக இரண்டு நாட்கள் நடைபெற்றன. 16 அணிகள் பங்கேற்றன.



கோவை: கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றன. கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கே.என்.ஜி.புதூர் சாய் நகர் எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் கலை பொழுதுபோக்கு அமைப்பின் சார்பில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இரவு-பகல் ஆட்டமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து 16 தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை வகித்தார்.



140 அடி அகலம் கொண்ட டர்ஃப் கிரவுண்டில் சுற்றிலும் மற்றும் மேல் பகுதியிலும் வலை அமைக்கப்பட்டிருந்தது.



ஏழு ஓவர் கொண்ட இந்த மேட்ச்களில், பேட்டிங் செய்யும் அணி முதல் ஆறு ஓவருக்குள் டபுள் டமாக்கா என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு ஓவரில் ஒரு ரன்னுக்கு இரண்டு ரன்கள் என எடுத்துக் கொள்ள முடியும். ஒரு அணிக்கு ஒன்பது பேர் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ.30,000 பரிசுத் தொகையும் கோப்பையும், இரண்டாவது அணிக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் கோப்பையும், மூன்றாவது அணிக்கு ரூ.5,000 பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் மற்றும் சிறந்த பீல்டர் உள்ளிட்ட பல சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர். குரூப் எஸ்.ஆர்.மருதாச்சலம், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி பச்சைமுத்து, கற்பகம் ராஜ்சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...