துடியலூரில் திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாட்டம்

கோவை துடியலூரில் திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, பெரியார், அண்ணா, கலைஞர் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை துடியலூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா துடியலூர் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



விழாவில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார்.



தலைமை செயற்குழு உறுப்பினர் T P. சுப்ரமணியன், துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், 2வது வட்டக் கழக செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பெரியார், அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 2வது வார்டு கவுன்சிலர் புஷ்பமணி அருள் குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பகுதி கழக நிர்வாகிகள் சதீஷ்குமார், சன் சோமு, மனோன்மணி, வட்டக் கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, ஆனந்தன், வெற்றிச்செல்வன், அருக்காணி, ctc சுப்ரமணியன், டிரைவர் சுப்பிரமணியன், பழனிச்சாமி, வாசு, T R. ராஜேந்திரன், ரவி, சின்னசாமி, செல்வா ஆகியோரும் பங்கேற்றனர். மகளிர் அணியை சார்ந்த ஷோபனா, கோமதி, தனபாக்கியம், லட்சுமி உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவினை 2வது வட்ட கழகத் துணைச் செயலாளர் தமிழ்நிதி ஏற்பாடு செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...