உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி மனு

கோவையில் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அருகில் மாட்டிறைச்சி கடை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலின் காம்பவுண்ட் சுவற்றினை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாகவும், கோவிலின் அருகில் மாட்டிறைச்சி கடை அமைந்திருப்பது பக்தர்களுக்கு இடையூறாகவும், பெரும் மனவேதனையையும் அளிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி மாட்டிறைச்சி கடையினை அகற்றிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, தமிழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...