உடுமலை அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உடுமலை எம்எல்ஏ உதவி - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரியில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் காயமடைந்த வீரக்குமாருக்கு உடுமலை எம்எல்ஏ கே. ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி பகுதியில் நேற்று இரவு சாலை விபத்து ஒன்று நடந்தது. இந்த விபத்தில் குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன், விபத்து நடந்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக காரிலிருந்து இறங்கிய அவர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், காயமடைந்த வீரக்குமாரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...