கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.1.15 கோடியில் பள்ளி கட்டுமானப் பணி தொடக்கம்

கோவை தெற்கு மண்டலத்தில் CSR நிதியுடன் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் அலுவலக அறைகள் கட்டுமானப் பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட நடுநிலைப்பள்ளியில் Consolidated Pvt Ltd என்ற நிறுவனத்தின் 100 சதவீத (CSR Fund) சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் அலுவலக அறைகள் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (16.09.2024) தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.76க்குட்பட்ட தெலுங்குபாளைம் பகுதியில் தமிழக அரசு அங்கீகாரம் பெற்று தனியார் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்த வைதீஸ்வரா வித்யாலயா நடுநிலைப்பள்ளி 1.95 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் 7500 சதுரடி பரப்பரளவில் பள்ளி கட்டிடம் மற்றும் 0.95 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்துடன் செயல்படுகிறது. இப்பள்ளியில் 266 எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இப்பள்ளி கட்டிடம் 72 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டதால் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தினை தனியார் நிறுவனத்தின் மூலம் பராமரிக்க இயலாததால் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.



மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட தெலுங்குபாளைம் வைதீஸ்வரா வித்யாலயா நடுநிலைப்பள்ளியில் Consolidated Pvt Ltd என்ற நிறுவனத்தின் 100 சதவீத (CSR Fund) சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 6818 சதுரடி பரப்பளவில் 10 எண்ணிக்கையிலான வகுப்பறைகள் மற்றும் அலுவலக அறைகளுக்கான கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு மேயர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், பள்ளி கட்டடம் அமைவதற்கு ரூ.1.15 கோடி நிதியுதவி வழங்கிய Consolidated Pvt Ltd என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், Consolidated Pvt Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ராமானந்த், தலைமை அதிகாரி (நிர்வாகம்) ஹரிஹரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் விஜயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...