கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 15 மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் பயனடைவர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள STEM மற்றும் ICT ஆய்வகத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் இன்று (16.09.2024) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.



இந்த ஆய்வகத்தில் STEM (Science Technology Engineering Mathematics - அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மற்றும் ICT பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கோயம்புத்தூர் மாநகராட்சியின் 15 பள்ளிகளைச் சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரை வாரத்திற்கு 1 முதல் 3 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.



இந்த ஆய்வகத்தின் முதன்மை நோக்கம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதாகும். ICT பேனல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் அறிவியல், கணிதம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 80க்கும் மேற்பட்ட மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. இந்த மாதிரிகள் கருத்தியல் தெளிவைக் கொண்டு வருவதற்கும், குழந்தைகளுக்கான கற்றல் அனுபவத்தை வளர்ப்பதற்கும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், STEM மற்றும் ICT நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...