கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: அமைச்சர் டிஆர்பி ராஜா அளித்த புதிய தகவல்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா புதிய தகவல் வெளியிட்டுள்ளார். விரைவில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


Coimbatore: கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவையில் YES எனும் சர்வதேச நிறுவனத்தின் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டிஆர்பி ராஜா, செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து மைதானத்திற்கான இடத்தை தேர்வு செய்தார். தற்போது அதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. விரைவில் மிகப் பிரம்மாண்டமாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்" என உறுதியளித்தார்.



ஏற்கனவே, கோவை ஒண்டிபுதூர், L&T நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் என நான்கு இடங்கள் கண்டறியப்பட்டன. இதில், கோவை ஒண்டிபுதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அந்தப் பகுதி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு, விளையாட்டுத் துறை சார்பில் ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...