கொடநாட்டில் நடந்த கொலை பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்த கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷாவின் கோவை வருகை கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அமித்ஷா வருகையின் போது சென்னையில் பிரத்யேக செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மீது பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அதிமுக-வின் நிர்வாகிகள் எந்த புகாரும் தெரிவிக்காத போது எதிர்க்கட்சிகள் மட்டுமே பாஜக மீது புகார் தெரிவித்து விருகின்றனர். பாஜக மீது நாஞ்சில் சம்பத் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் உண்மையில்லாதது.

அதிகார மையத்தின் தலைமையிடமாக இருந்த கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்தக் கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்துகள், நிலைப்பாடுகள் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து விரிவாக்கம் அளிக்க வேண்டியது அவர்தான். அமித்ஷா வரும் போது டாக்டர். கிருஷ்ணசாமி பாஜக-வுடன்  இணைவாரா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

தமிழக அரசியல் சூழல் பாஜக-விற்கு சாதகமாகவே இருந்து வருகின்றது. சமூக நீதி பேசும் தலைவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான புதிய ஆணையம் தொடர்பான சட்டமசோதாவிற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியை புகுந்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை" இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...