பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது. 2023 ஜனவரி முதல் 2024 செப்டம்பர் வரை பயின்று முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

2023 ஜனவரி 23 முதல் 2024 செப்டம்பர் வரை பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள் மற்றும் தொலைநிலைக் கல்வி வாயிலாக பயின்று முடித்து, தற்காலிக சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

2023 ஆகஸ்ட் 16 முதல் 2024 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை Ph.D. முடித்தவர்களும் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். Ph.D. மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in அல்லது https://b-u.ac.in/298/convocation என்ற இணையதளங்கள் வாயிலாக தகவல்களைப் பெறலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...