மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: கோவையில் உடலுக்கு அரசு மரியாதை

உடுமலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 27 வயது இளைஞரின் ஆறு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.



கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கடத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (27) என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கார்த்திக் ராஜா ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 15 அன்று, உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார். உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடலில் இருந்து சிறுநீரகம், இதயம், கண் உள்ளிட்ட ஆறு உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இன்று (செப்டம்பர் 17) கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...