கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவை ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிஸா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கோவைக்கு வரும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் குமரேஷ், உதவி ஆய்வாளர் கோமதி ஆகியோர் தலைமையிலான போலீசார், கோவை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் டைகர் உதவியுடன் நேற்று (செப்டம்பர் 16) சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, ஒடிஸா மற்றும் ஆந்திரம் வழியாக கோவைக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அதில் வந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, தன்பாத் ரயிலில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து கோவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ஒடிஸா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கோவை வழியாக கேரளத்துக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதைக் கண்காணித்துப் பிடித்து வருகிறோம். அதன்படி, கடந்த எட்டு மாதங்களில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா கடத்தி வந்த 20 பேரை கைது செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...