அமெரிக்காவில் ராகுல் காந்தி இந்திய விரோத சக்திகளை ஒருங்கிணைக்கிறார் - எச். ராஜா குற்றச்சாட்டு

கோவை பாஜக அலுவலகத்தில் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமரின் பிறந்தநாள், பாஜக உறுப்பினர் சேர்க்கை, விஸ்வகர்மா திட்டம், டாஸ்மாக் விற்பனை, ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணம் குறித்து கருத்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.



இந்த சந்திப்பின் போது அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த எச். ராஜா, "தேர்தலின் போது முதல் நூறு நாட்களுக்குள் பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். இந்த நூறு நாட்களில் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டு இருக்கின்றன," என்றார்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசிய அவர், "தமிழக பாஜகவில் ஏற்கனவே 31 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் மத்தியிலும், நகர்புறங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது," என்று தெரிவித்தார்.

விஸ்வகர்மா திட்டம் குறித்து கருத்து தெரிவித்த எச். ராஜா, "ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுபவர்கள் விஸ்வகர்மா திட்டத்தால் ஜாதி வந்துவிடும் என்று கூறுவது பெரும் பாசாங்கு. மாநில அரசு உடனடியாக விஸ்வகர்மா திட்டத்தை வெளியிட வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.

டாஸ்மாக் விற்பனை குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் குறித்து அறிந்த மத்திய விவசாயத் துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். திமுக'வில் போதை அணி என்று ஒரு அணி உருவாக்கலாம். அந்த அளவிற்கு போதை அதிகரித்துள்ளது," என்று விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணம் குறித்து கருத்து தெரிவித்த எச். ராஜா, "அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி இந்திய விரோத சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறார். இந்தியாவிற்கு விரோதமாக பேசுவது தான் ராகுல் காந்தியின் செயல்பாடாக உள்ளது," என்று குற்றம் சாட்டினார்.

ஜிஎஸ்டி குறித்தும் கருத்து தெரிவித்த அவர், "ஜிஎஸ்டியால் வரிவிகிதத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வேண்டுமென்றே மத்திய அரசாங்கத்தின் திட்டம் என்பதனாலேயே பொய்யான தகவலை சொல்லி விவாதிக்கிறார்கள்," என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...