கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம்

கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.


கோவை: கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.



ஆனால், அபுதாபியில் இருந்து கோவை வரும் விமான நேரம் மாற்றமின்றி அதிகாலை 1:05 மணிக்கு புறப்பட்டு காலை 6:35 மணிக்கு வந்தடையும்.

இண்டிகோ விமான நிறுவனம் நவம்பர் மாதம் முதல் மார்ச் 2025 வரை டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. இந்த சேவை குளிர்கால அட்டவணையில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால அட்டவணை அக்டோபர் 29 முதல் மார்ச் 30 வரை நடைமுறையில் இருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது.

மேலும், இண்டிகோ விமான நிறுவனம் அக்டோபர் 27 முதல் கோவைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:15 மணிக்கு சிங்கப்பூரை சென்றடையும். திரும்பும் விமானம் சிங்கப்பூரில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு கோவையை வந்தடையும்.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கான நேரடி விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கோவையில் இருந்து மற்ற சில சர்வதேச நாடுகளுக்கும் இண்டிகோ விமான சேவையை விரைவில் தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...