பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மரக்கன்றுகள் நடும் விழா

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பாஜக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சித்தாபுதூர், நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில மேற்பார்வை குழு தலைவர் H. ராஜா, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் Prof கனக சபாபதி மற்றும் கோவை மாவட்ட தலைவர் ஜே. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



அதேபோல, ராமநாதபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.





இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பாஜகவில் இணைந்தனர்.



வள்ளியம்மாள் பூங்கா, 80 அடி சாலை, இராமநாதபுரம் பகுதியிலும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இங்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் H. ராஜா, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...