பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் திமுகவினர் மரியாதை

கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். ஆனைமலையில் திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Coimbatore: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை இன்று (செப்.17) செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், திமுக பகுதி கழக செயலாளர் பசுபதி, வழக்கறிஞர் கணேஷ்குமார், அன்புசெழியன் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் திமுக கட்சியின் சார்பாக பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு ஆனைமலை நகரச் செயலாளர் டாக்டர் ஏ.பி.செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆனைமலை நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர் ஏ.அபுதாஹீர் மற்றும் பல உடன்பிறப்புகள் திரளாகக் கலந்து கொண்டனர். இவ்வாறு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...